நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காலமானார்  பி.பாண்டியன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விழுப்புரம் பதிப்பில் உதவி வர்த்தகப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த பி.பாண்டியன் (39) (மே 1) சனிக்கிழமை காலமானார்.

News image

பி.பாண்டியன்

Updated On :1 மே 2021, 3:07 pm

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விழுப்புரம் பதிப்பில் உதவி வர்த்தகப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த பி.பாண்டியன் (39) (மே 1) சனிக்கிழமை காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மங்கலத்தை அடுத்த வேடந்தவாடி கிராமத்தைச்  சேர்ந்த பச்சையப்பன் மகன் பாண்டியன் (39). 
எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 2016ஆம் ஆண்டு முதல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விழுப்புரம் பதிப்புக்கு உள்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி வர்த்தகப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் வேடந்தவாடி கிராமத்தில் நடைபெற்றன.

இவருக்கு மனைவி செண்பகம் (31), மகன்கள் ஹரிஷ்குமார் (4), சுந்தரபாண்டியன் (2) ஆகியோர் உள்ளனர். 

தொடர்புக்கு: 8122612003, 9790459341.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.