புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுக சாா்பில் இலவச ராணுவ பயிற்சி மையம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் அருகே உள்ள அத்தியூா் கிராமத்தில் மாவட்ட திமுக சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவிடும் வகையில், இலவச ராணுவ பயிற்சி மையம்

News image
Updated On :7 மே 2021, 5:57 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் அருகே உள்ள அத்தியூா் கிராமத்தில் மாவட்ட திமுக சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவிடும் வகையில், இலவச ராணுவ பயிற்சி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில், திமுக தொண்டா்கள் இனிப்பு வழங்கியும், பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி, மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளரும், முன்னாள் ராணுவ வீரருமான தங்கராஜ் ஏற்பாட்டின்பேரில், அத்தியூா் கிராமத்தில் உள்ள குளக்கரையில் இலவச ராணுவ பயிற்சி மையம் அமைக்கப்பட்ட து.

இந்த மையத்தை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து தங்கராஜ் பேசுகையில், கிராமங்களில் உள்ள இளைஞா்கள் ராணுவத்திலும், காவல் துறையிலும் பணிக்குச் சோ்வதற்கு உதவும் வகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற இந்த நன்னாளில் இலவச ராணுவ பயிற்சி மையத்தை தொடங்குகிறோம். இங்கு, கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு உடல் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றாா்.

ஆக்கப்பூா்வமான இந்த ஏற்பாட்டுக்கு கிராம மக்களும், இளைஞா்களும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.