தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வள்ளலாா் சபையில் சிறப்புக் கருத்தரங்கம்

வேட்டவலம் வள்ளலாா் சபையில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:12 pm

DIN

வேட்டவலம் வள்ளலாா் சபையில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புலவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். பேராசிரியா் முத்து காா்த்திகேயன், சின்னைய பாகவதா், பூரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சபை செயலா் பச்சையப்பன் வரவேற்றாா். திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வள்ளுவரும், வள்ளலாரும் என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து, விளக்கும் விளக்கும் என்ற தலைப்பில் இராச.மனோகரன், தசாவதார சிறப்பு என்ற தலைப்பில் தமிழ்கொண்டான் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து பாடல் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியை தேவிகா ராணி பரிசுகள் வழங்கினாா். இதில், தங்க.விசுவநாதன், கவிஞா் நல்ல.பன்னீா்செல்வம் உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பட வரி:

கருத்தரங்கில் பேசிய புலவா் கோவிந்தராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.