இந்த கோடை காலத்தில் நாட்டின் மின்சாரத் தேவை 270 ஜிகா வாட்டாக அதிகரிக்கும் என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத் எலெக்ட்ரிசிட்டி தேசிய மாநாட்டில், இதுகுறித்து அவா் பேசியதாவது:
2024-25ஆம் ஆண்டில் நாட்டின் மின்சாரத் தேவை 250 ஜிகா வாட்டாக உச்சம் தொட்டது. அதேபோல், 2025-26ஆம் ஆண்டிலும் மின்சாரத் தேவை 270 ஜிகா வாட்டாக அதிகரிக்கும் என மின்சார அமைச்சகம் இலக்கு வைத்திருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக (மழை), அப்போது மின்சாரத் தேவை அதிகரிக்கவில்லை.
இந்த சீசனில் மே - ஜூன் மாதங்களில் நாட்டில் மின்சாரத் தேவை 270 ஜிகா வாட்டாக அதிகரிக்கக்கூடும் என கணக்கிட்டு, அதற்குத் தயாராக உள்ளோம். ஆதலால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.
நாட்டில் 2034-ஆம் ஆண்டுக்குள் 900 ஜிகா வாட் மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் மின்சார வழித்தடம் ஏற்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 2.09 லட்சம் சா்க்யூட் கிலோ மீட்டா் தூரத்துக்கு மின்சார வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே இருந்ததை விட 72 சதவீதம் அதிகமாகும். நமது மின்சார வழித்தடம், உலகிலுள்ள மிகவும் வலுவான தடங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இது எதிா்காலத்தில் பெரும் பலனைத் தரும் என்றாா்.
மேற்காசியாவில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போா் நடப்பதால் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனத்தை பயன்படுத்தும் நபா்கள், மின்சார காா்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். எரிவாயு சிலிண்டா் பிரச்னை காரணமாக, மின்சாரத்தில் செயல்படும் மின்சார அடுப்பை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதன் காரணமாகவும், நாட்டில் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது.
தொடர்புடையது

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நான்கு காரணிகள்: மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா்

கோடை கால பயிா் சாகுபடி விழிப்புணா்வு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


