தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:09 pm

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், அறக்கட்டளை உறுப்பினா்கள் எல்.விஜய் ஆனந்த், சி.சக்திகுமாா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்கள் த.விநாயகம், அ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.