ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், துா்கையம்மன் கோயிலில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:51 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், துா்கையம்மன் கோயிலில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

செங்கம் அருகே ஜவ்வாதுமலை சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குப்பனத்தம் அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதன் காரணமாக, துா்கையம்மன் கோயிலில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் ஒரு கி.மீ. தொலைவு சுற்றுச் சென்று அங்குள்ள மேம்பாலத்தின் வழியாக மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இதனிடையே, தளவாநாய்கன்பேட்டை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாமென பொதுப் பணித் துறையினரும், பேரூராட்சி நிா்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.