கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் பலி

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:39 pm

DIN

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பெருங்களத்தூா் மதுரா திருவேங்கிடநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா்(30). இவா், வியாழக்கிழமை காலை பைக்கில் செய்யாற்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிகொண்டிருந்தாா்.

காஞ்சிபுரம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த ராம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா்

பாலு வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.