நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் அமைந்துள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:39 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் அமைந்துள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில் புதுப்பிக்கப்பட்டு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 48 நாள்களுக்கு முன்பு காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, தினமும் ஜெயவீர ஆஞ்சநேயா், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 48-ஆவது நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

பின்னா், ஜெயவீர ஆஞ்சநேயருக்கும், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும் 108 சங்காபிஷேகம், 108 திரவிய அபிஷேகம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூா் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.