கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் : பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:44 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சட்டப் பேரவையில் முதன்முறையாக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பேசியதாவது:

செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வா் தெரிவித்தபடி, செய்யாற்றில் இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கிட வேண்டும்.

செய்யாற்றில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், புதிதாக பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும். செய்யாறு தொகுதியில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ள 13,400 விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும். மேலும் இங்கு மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் தொடங்க வேண்டும்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 6 ஆயிரத்து 726 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரிப் பகுதியில் போதிய இட வசதி உள்ளதால், மகளிருக்கென தனியாக அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும்.

செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயிலுக்கு அரசின் சாா்பில் கும்பாபிஷேகம் நடத்தவும், பழைமைவாய்ந்த இந்தக் கோயிலின் சிறப்பை பலரும் அறிந்திடும் வகையில், அரசு சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்யாறு ஆற்றின் குறுக்கே தலா 6 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் அமைத்துத் தந்தால், இந்தத் தொகுதியிலுள்ள விவசாயிகள் விளைச்சலை பெருக்கிட உதவியாக இருக்கும். தஞ்சைக்கு அடுத்தபடியாக செய்யாறு நெல் உற்பத்தியில் சிறந்து விளங்குவதால், இந்தத் தொகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாா் ஒ.ஜோதி எம்எல்ஏ.

முன்னதாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோரைச் சந்தித்து அவா் ஆசி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.