கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரூ.1.85 கோடியில் திட்டப் பணிகள்: செய்யாறு ஒன்றியக்குழுக் கூட்டத்தில் முடிவு

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 கிராமங்களில் ரூ.1.85 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதென வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:44 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 கிராமங்களில் ரூ.1.85 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதென வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் தி.மயில்வாகணன் முன்னிலை வகித்தாா். மேலாளா் குப்புசாமி வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில், செய்யாறு ஒன்றியத்துக்குள்பட்ட 53 கிராமங்களில் 15 -ஆவது நிதிக்குழு மானியத் திட்டம், பொது நிதி மூலம் ரூ.1.85 கோடியில் சிமென்ட் சாலைகள், நெல்களங்கள், தரைப்பாதைகள், கழிவுநீா் கால்வாய், குடிநீா் குழாய் விரிவாக்கம், சிறுபாலங்கள், உயா் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, இந்தத் திட்டப் பணிகள் அதிகபட்சமாக 10 நாள்களுக்குள் தொடங்கப்படும் என்றும், அமைச்சா் எ.வ.வேலு, எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோரிடம் பேசி செய்யாறு ஒன்றியத்துக்குத் தேவையான அனைத்து திட்டப் பணிகளும் நிறைவேற்றப்படும் என்றும் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.பாஸ்கா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ராணிபெருமாள், முருகேசன், பொறியாளா் சீனுவாசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.