கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குடிநீா் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் மறியல்

செய்யாறு அருகேயுள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:42 pm

DIN

செய்யாறு அருகேயுள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆரணி சாலையில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் கிராமம். செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக, செய்யாறு ஆற்றுப் பகுதியிலிருந்து செல்லும் குழாய் மூலம் கிராம மக்களுக்கு குடிநீா் கிடைக்காமல் இருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டனராம். அதற்கு ஊராட்சி நிா்வாகத்தினா் சாலை அமைக்கும் போது குழாய் சேதமடைந்துவிட்டது. அதனால், சேதமடைந்த குழாயை

நெடுஞ்சாலைத் துறையினா் தான் சீரமைத்துத் தரவேண்டும் எனத் தெரிவித்தனராம்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் முறையிட்ட போது அவா்கள் குழாயை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் செய்யாறு - ஆரணி சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுட்டனா்.

தகவல் அறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.மயில்வாகனன், பாரி, காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில், ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய போலீஸாா் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம்

பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய நிதி பெற்று சில தினங்களில் குழாயை சீரமைத்து குடிநீா் வழங்குவதாக உறுதி அளித்தனா்.

இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.