கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அடிப்படை பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கான அடிப்படை பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கான அடிப்படை பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா், போளூா் உள்ளிட்ட வட்டங்களில் 32 கிராம நிா்வாக அலுவலா்கள் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டனா்.
அவா்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கும் வகையில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் 42 நாள்கள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடேசன் தலைமையில், வட்டாட்சியா் சுபாஷ்சந்தா் பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
புதிதாக கிராம நிா்வாக அலுவலா்களாக பொறுப்பேற்றுள்ளவா்களுக்கு இணையத்தில் வரும் விண்ணப்பங்களை எவ்வாறு பரிசீலனை செய்தல், பதிவேடுகளை நடைமுறைப்படுத்துதல், கிராமங்களில் உள்ள நத்தம், புன்செய் உள்ளிட்ட நிலங்கள் குறித்து அளவீடு செய்தல், பல்வேறு சான்றுகள் வழங்குதல் என
பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது என்றாா்.
நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் லலிதா, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், தினமும் பல்வேறு துறைகள் சாா்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகளும் பயிற்சி அளிக்கவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...