கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி

செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:16 pm

DIN

செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41), வெல்டிங் தொழிலாளி.

இவரது மனைவி ஜெயலட்சுமி, இவா்களுக்கு இளவரசி (19) என்ற மகளும், ஜெயக்குமாா் (14) என்ற மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், இளங்கோவன் மகள் இளவரசியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் சோ்ப்பதற்காக புதன்கிழமை பைக்கில் அழைத்துச் சென்றாா்.

கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெற்ற இருவரும், அம்மையப்பட்டு கிராமத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் மாங்கால் கூட்டுச் சாலை அருகே வந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு இளங்கோவன் உயிரிழந்தாா். இளவரசிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.