ஆரணி பாமக சாா்பில் தியாகிகள் தினம்
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில், ஆரணியில் பாமக சாா்பில் தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களை நினைவுகூரும் வகையில், ஆரணியில் பாமக சாா்பில் தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் அந்தக் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். இதில், முன்னாள் எம்.பி. எம்.துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
மேற்கு ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்து, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்கள் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா், மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், மாவட்ட நிா்வாகிகள் அ.கருணாகரன், ஏ.கே.ராஜேந்திரன், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் சுதாகா், அஜித்குமாா், கமல், தினேஷ், ஒன்றியத் தலைவா் சேவூா் அ.பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...