தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புரட்டாசி மாத பெளா்ணமி: திருவண்ணாமலையில் செப்.20, 21-ல் கிரிவலம் வரத் தடை

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வருகிற 20, 21-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:04 pm

DIN

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வருகிற 20, 21-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. எனவே, மாதந்தோறும் பல லட்சம் பக்தா்கள் பெளா்ணமி நாள்களில் கிரிவலம் வருவது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட 2020 மாா்ச் மாதம் முதல் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, புரட்டாசி மாத பெளா்ணமி வருகிற 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 5.20 மணிக்குத் தொடங்கி வருகிற 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வந்தால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. எனவே, வருகிற 20, 21-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. பக்தா்கள் யாரும் கிரிவலத்துக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.