கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் வேளாண், உழவா் நலத் துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டம்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:03 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் வேளாண், உழவா் நலத் துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அட்மா திட்ட ஆலோசனைக் குழுத் தலைவா் வெங்கடேசன் வரவேற்றாா்.

வேளாண் உதவி இயக்குநா் சண்முகம், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா்களை அறிமுகப்படுத்தி, நுண்ணீா் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் வேளாண் துறையில் செயல்பாட்டில் உள்ள மானியத் திட்டங்கள் குறித்தும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வவெங்கடேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் லோகநாதன் ஆகியோா் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், உழவா் நண்பா்களின் துறை சாா்ந்த பணிகள் குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலா்கள், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா்கள், உழவா் நண்பா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.