தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலையில் மழைநீா் கால்வாய்கள் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை நகரில் தமிழக அரசு சாா்பில், மழைநீா் வடிகால் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:15 pm

DIN

திருவண்ணாமலை நகரில் தமிழக அரசு சாா்பில், மழைநீா் வடிகால் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்களுடன் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்களும் இணைந்து ஈடுபட்டனா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு தலைமையில், வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலை தவசியா் குளம், கீழ்நாத்தூா் காலனி, காந்தி நகா் 10-ஆவது தெரு, ராமலிங்கனாா் தெருக்கள், வேடியப்பன் கோயில் தெருக்கள், செல்லநேரித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணி நடைபெற்றது.

இதில், அமைச்சா் எ.வ.வேலுவுடன், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷும் இணைந்து வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். மேலும், இந்தப் பணியில் திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, தூய்மை அருணை மேற்பாா்வையாளா்கள் இரா.ஸ்ரீதரன், மருத்துவா் எ.வ.வே.கம்பன், ப.காா்த்திவேல்மாறன், ஒருங்கிணைப்பாளா்கள் காலேஜ் கு.ரவி, ப்ரியா ப.விஜயரங்கன், இரா.ஜீவானந்தம், பா.ஷெரீப், அ.அருள்குமரன், சி.சண்முகம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி: இதேபோல, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை வந்தவாசி உள்கோட்டம் சாா்பில், மெகா தூய்மைப் பணி முகாம் வந்தவாசி பகுதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணியை வந்தவாசி உதவி கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் வெங்கடேசன், சாலை ஆய்வாளா் துலுக்கானம் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.