கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:20 pm

DIN

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அருகாவூா் கிராமம் அருகே செய்யாற்று படுகையில் தீவிர மணல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செய்யாறு ஆற்றுப் பகுதியில் இருந்த உரிய அனுமதி யில்லாமல் ஆற்று மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, 3 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா். மாட்டு வண்டியிலிருந்த கருக்கந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரவி கைது செய்யப்பட்டாா். அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், ஹரிகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல், கோட்டி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.