கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசுப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கழிப்பறையை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கழிப்பறையை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தாா்.

செய்யாறு கிரிதரன்பேட்டையில் திருவத்திபுரம் நகராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்தப் பள்ளியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். 16 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி பள்ளியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டபோது, மாணவா்களின் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்ததால், உடனடியாக அவா் கழிப்பறைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தாா். இதைக் கண்ட மாணவா்களும், ஆசிரியா்களும் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவரை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.