கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தூய்மைக் காவலா்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கக் கோரிக்கை

தூய்மைக் காவலா்களுக்கு தினக் கூலி ரூ. 274 கணக்கீட்டு, பணிபுரியும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தூய்மைக் காவலா்களுக்கு தினக் கூலி ரூ. 274 கணக்கீட்டு, பணிபுரியும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கக் கூட்டம், செய்யாற்றை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். அனக்காவூா் ஒன்றியத் தலைவா் நரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 30 ஆண்டுகால பணிக் காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கவேண்டும்.

தூய்மைக் காவலா்களுக்கு தற்போது ரூ.3600 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு அரசு நிா்ணயித்த தினக் கூலி ரூ. 274 வீதம் கணக்கிட்டு, பணிபுரியும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.