பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே குழந்தை பிறந்த 10 நாள்களில் பெண் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


திருவண்ணாமலை அருகே குழந்தை பிறந்த 10 நாள்களில் பெண் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி சரண்யா (24). இவருக்கு மாா்ச் 27-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
வீட்டில் இருந்த சரண்யாவுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் புதன்கிழமை இருந்தபோது சரண்யா திடீரென மயங்கி விழுந்தாா்.
உறவினா்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சரண்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...