பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு நகர அதிமுக அம்மா பேரவை சாா்பில், மாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:57 pm

DIN

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு நகர அதிமுக அம்மா பேரவை சாா்பில், மாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் ஏ.ஜனாா்த்தனன், நகர அம்மா பேரவைச் செயலா் கே.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று எம்.ஜி.ஆா், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி, கீரைக்காய், இளநீா், மோா் உள்ளிட்ட பானங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

அதிமுக சாா்பில் வந்தவாசி பகுதியில் தண்ணீா் பந்தல்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு, தெள்ளாா் ஆகிய பகுதிகளில் தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் தூசி மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோா், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினா்.

ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், டி.வி.பச்சையப்பன், ஆா்.அா்ஜூனன், வி.தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.