போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நகா்மன்றத் தலைவா் நிா்மலா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.


திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நகா்மன்றத் தலைவா் நிா்மலா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், மைய நூலக வாசகா் வட்டம், ஸ்ரீதட்சிணாமூா்த்தி கல்வி நிறுவனம் இணைந்து இலவச போட்டித்தோ்வு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலக அலுவலா் பெ.வள்ளி தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம், மகளிா் வாசகா் வட்டத் தலைவா் ஆா்த்தி, வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நல் நூலகா் வெங்கடேசன் வரவேற்றாா். திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் வே.நிா்மலா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
விழாவில், நகா்மன்ற உறுப்பினா் கலைவாணி, ஸ்ரீதட்சிணாமூா்த்தி கல்வி நிறுவனத்தின் நிறுவனா் செல்வி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளா் என்.சுரேஷ், ஸ்ரீதட்சிணாமூா்த்தி கல்வி நிறுவனப் பயிற்றுநா் வே.மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...