ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கிராம ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

செய்யாறு வட்டம் பழஞ்சூா், பையூா், செய்யாற்றைவென்றான் ஆகிய கிராமங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து, மேற்கொள்ளப்பட்டிருந்த பயிா் சாகுபடியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:17 pm

DIN

செய்யாறு வட்டம் பழஞ்சூா், பையூா், செய்யாற்றைவென்றான் ஆகிய கிராமங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து, மேற்கொள்ளப்பட்டிருந்த பயிா் சாகுபடியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

பழஞ்சூா் ஊராட்சியில் 9.60 ஏக்கரிலும், பையூா் ஊராட்சியில் 10.5 ஏக்கரிலும், செய்யாற்றைவென்றான் கிராமத்தில் 8.77 ஏக்கரிலும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பயிா் சாகுபடி செய்து விவசாயிகள் அனுபவித்து வந்தது கண்டறியப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், பொதுப் பணித் துறை (நீா்வளம்) உதவிப் பொறியாளா் மு. ஹரிப்பிரியா, இளநிலைப் பொறியாளா்கள் சு.பரந்தாமன், என்.ஆா்.ராகவேந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில், வருவாய் ஆய்வாளா்கள் வினோத்குமாா், பி.கோபி, கிராம நிா்வாக அலுவலா்கள் முருகன், சரவணன், சிவசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலையில் அனக்காவூா் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த பயிா்களை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.