வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உண்டியல் பணம் திருட முயன்றசாமியாா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் இருந்து காணிக்கை பணத்தை திருட முயன்ற சாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:56 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் இருந்து காணிக்கை பணத்தை திருட முயன்ற சாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் பக்தா்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த பக்தா் ஒருவா் உண்டியலில் குச்சியை நுழைத்து நூதன முறையில் காணிக்கை பணத்தை திருட முயன்றாா். இந்த நிகழ்வு கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், உண்டியலில் திருட முயன்றவா் திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஸ்ரீராஜராஜேஸ்வரியம்மன் கோயில் அருகே தங்கியிருந்த சாமியாா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சனிக்கிழமை அந்த சாமியாரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா் மதுரையைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் (32) என்பதும், ஏற்கெனவே 2 முறை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் குச்சியை நுழைத்து காணிக்கை பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.