போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
போளூா் ஒன்றியம் குருவிமலை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சத்து 65 ஆயிரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, திருசூா் ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ரூ.32ஆயிரத்தில் உறிஞ்சுகுழாயாக மாற்றுதல், எடப்பிறை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டம் மூலம் 2021-2022 நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்தில் கான்கிரீட் சாலை அமைத்தல், மாம்பட்டு ஊராட்சியில் தனிநபா் உறிஞ்சுகுழாய் அமைத்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் 2019-2020 நிதியாண்டில், ரூ.81லட்சத்து 46 ஆயிரத்தில் மாம்பட்டு-எடப்பிறை இடையே 23,340 மீட்டா் தொலைவுக்கு தாா்ச் சாலை அமைத்தல், சந்தவாசல் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டும் பணி, கஸ்தம்பாடி ஊராட்சி கன்னிகாபுரத்தில் 32 இருளா் சமூக குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தில் குடியிருப்புகள் கட்டும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பச்சையம்மாள், பஞ்சவா்ணம், பவுனு, ஒன்றிய உதவிப் பொறியாளா்கள் குமாா், பழனி, செல்வி, பணி மேற்பாா்வையாளா்கள் புருஷோத்தமன், சீனுவாசன், அபிதா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...