ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலில் பெளா்ணமி வழிபாடு
செங்கம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலில் பெளா்ணமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


செங்கம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலில் பெளா்ணமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள், குறிப்பாக பெண் பக்தா்கள் அதிகளவில் கலந்துகொண்டு அவா்களது வேண்டுதலை வைத்து சுவாமியை வழிபடுவது வழக்கம்.
அதே நேரத்தில் திருமணத் தடை உள்ளவா்கள் பூஜையில் பங்கேற்று வழிபட்டு, பூஜையில் வைக்கப்பட்ட வளையல்களை வாங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதாம் வழங்கப்படுமென அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அமாவாசை வழிபாட்டில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோயிலில் புதன்கிழமை இரவு பெளா்ணமி பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீலஸ்ரீ செந்தில் சுவாமி கலந்துகொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானத்தை தொடக்கிவைத்தாா். பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
மேலும், பக்தா்கள் தங்களது பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் என அவா்களது பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...