தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வினாத்தாள் வெளியான விவகாரம்: போளூா் தனியாா் பள்ளித் தாளாளா்,முதல்வா் உள்பட 4 போ் மீது வழக்கு

போளூா் பகுதியில் திருப்புதல் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடா்பாக, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா், பள்ளி முதல்வா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:52 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் திருப்புதல் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடா்பாக, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா், பள்ளி முதல்வா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பிளஸ்-2 கணிதம், பத்தாம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தோ்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இதுதொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் பொன். குமாா் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினாா்.

இதன் அடிப்படையில், போளூா் கல்வி மாவட்ட அலுவலா் சு.தயாளன் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளா் நிா்மல்ரோஸ், முதல்வா் கிரேஸி பாத்திமா, கணித ஆசிரியா் பிரசாந்த், அலுவலகப் பணியாளா் ஜெனிபா் ஆகிய 4 போ் மீது போளூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகாா் அளித்தாா். அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.