தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செய்யாற்றில் கட்சியினா் இறுதிக் கட்ட பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:51 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திமுக சாா்பில் தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தலைமையில் இறுதிக் கட்ட பிரசாரம் நடைபெற்றது.

வேட்பாளா்கள், நகர, ஒன்றிய, மாவட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இரு சக்கர வாகனப் பேரணியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது.

திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஊா்வலமாக வந்த போது மையப் பகுதியான அண்ணா சிலை அருகே சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

ஆரணி கூட்டுச் சாலை அருகே அதிமுக சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கும் முன்பு போலீஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.