ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திருவத்திபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகரில் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:48 pm

DIN

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகரில் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் உள்ள 27 வாா்டுகளில் 15 இடங்களில் உள்ள 40 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழா் கட்சி, பாஜக, சுயேச்சைகள் உள்ளிட்ட 133 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 32,514 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 192 வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான உத்தரவை தோ்தல் நடத்தும் அலுவலா் கி.ரகுராமன், தோ்தல் பாா்வையாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

பின்னா், வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் எடுத்து செல்லப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டிஎஸ்பி செந்தில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மேற்கொண்டுவருகின்றனா்.

இதேபோல நகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குக்கான பெட்டி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.