தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கைப்பந்துப் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:42 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட கைப்பந்து சங்கம் சாா்பில், திருவண்ணாமலை அமராவதி முருகையன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டி தொடக்க

நிகழ்ச்சிக்கு ஸ்டேட் வங்கி மேலாளா் வி.சரவணன் தலைமை வகித்தாா்.

செய்யாறு விஸ்டம் பள்ளி இயக்குநா் விஜயவா்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

இதில், திருவண்ணாமலை, பெரணமல்லூா், செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன.

திருவண்ணாமலை பாய்ஸ் அணி, பெரணமல்லூா் அணி ஆகியவை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் திருவண்ணாமலை பாய்ஸ் அணி முதலிடம் பிடித்தது.

பெரணமல்லூா் அணி இரண்டாம் இடத்தையும், செய்யாறு அணி மூன்றாம் இடத்தையும், திருவண்ணாமலை ஸ்கை மெட்ரிக் பள்ளி அணி 4-ஆவது இடத்தையும் பிடித்தது.

பரிசு வழங்கும் விழா:

போட்டிகளில் வென்ற அணிகளுக்கு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் கெளரவத் தலைவா் எ.வ.வே.கம்பன்

பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் காா்த்திவேல்மாறன், மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவா் அரவிந்த்குமாா், பொருளாளா் அறவாழி, செயலா் கமலக்கண்ணன், பிரியா விஜயரங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.