திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 10-ஆவது சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 10-ஆவது சாதாரணக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுச் செயலா் நா.அறவாழி வரவேற்றாா்.
கூட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) க.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், முத்துமாறன், எஸ்.செல்வம், திவ்யா சபாரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...