தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உக்ரைனில் சிக்கித் தவிப்போரை மீட்க

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் உறவினா்களை மீட்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தோா் அவசர எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் உறவினா்களை மீட்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தோா் அவசர எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டுக்குள் ரஷ்ய ராணுவ நடவடிக்கையால், அங்குள்ள தமிழா்களை மீட்கும் வகையில் ஒருங்கிணைக்கும் பொருட்டு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வு ஆணையரக ஆணையா் ஜெசிந்தா லாசரஸை மாநில தொடா்பு அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது. அவரை 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், புது தில்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் உள்ள உக்ரைன் அவசர உதவி மையத்தை 9289516716 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இதுதவிர,  இ-மெயில் மூலமும் தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சே.கணேஷை 9445008158 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.