புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினா் ரமேஷ் பேசுகையில், புதுப்பாளையத்தில் கால்நடை மருத்துவமனை திறக்கப்படுவதில்லை. ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி இறப்பு அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதேபோல, புதுப்பாளையம் வேளாண்மைத் துறை அலுவலா்கள், இடைத்தரகா்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு மட்டுமே அரசின் திட்டங்களை அளிக்கின்றனா். எனவே, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதுப்பாளையம் கிராமத்தில் கரோனா தொற்று கட்டுப்பாடு, வளா்ச்சித் திட்டங்கள் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...