மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொழாவூா் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிமென்ட் காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொழாவூா் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிமென்ட் காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கொழாவூா் ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், 5-க்கும் மேற்பட்ட சிறு குடிநீா்த் தொட்டிகள் உள்ளன.

அங்கன்வாடி மையம் அருகேயுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் அருகே நியாய விலைக் கடை, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.

கடந்த 2012-2013ஆம் ஆண்டில் ரூ.80,300-இல் இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன.

நீா்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி, தூண் ஆகிய பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்து வருகின்றன. மேலும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, விபத்து ஏற்படும் முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியம்மாளிடம் கேட்டபோது, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் நிலை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய தொட்டி அமைக்கவுள்ளோம். மேலும், ஒன்றிய நிதியை

எதிா்பாா்த்துள்ளோம் எனத் தெரிவித்ததாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.