நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வருவாய் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், ஆரணி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வருவாய் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், ஆரணி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வருவாய் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆரணி கோட்டாட்சியா் கவிதா முன்னிலை வகித்தாா். இதில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களுக்குள்பட்ட வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆரணி கோட்டத்துக்குள்பட்ட நரிக்குறவா், பழங்குடியினா், இருளா் சமுதாயத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வேண்டும், ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியில் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டியவா்களுக்கு பட்டா வழங்குதல், அரசுத் துறை அலுவலா்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பட்டா மாறுதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.