ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாடு மேய்க்கச் சென்ற பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

செய்யாறு அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி தாட்சாயணி (38). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.

விவசாயியான ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சட்டுவந்தங்கல் கிராமத்தில், சென்னையைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். விவசாயத்துடன் அதே பகுதியில் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், ராஜேந்திரன் மனைவி தாட்சாயணி புதன்கிழமை மதியம் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். ஆனால், அவா் வீடு திரும்பவில்லை.

தேடிச் சென்றபோது அவா் ஓட்டிச் சென்ற மாடுகள் மட்டும் இருந்தன.

தாட்சாயணியை பல இடங்களில் தேடிய நிலையில், குத்தகை எடுத்துள்ள விவசாய நிலத்துக்கு அருகேயுள்ள மற்றொரு விவசாய நிலத்தில் வோ்க்கடலை நிலப் பகுதியில் இறந்த நிலையில் அவரது உடல் இருந்தது.

மேலும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

தகவலறிந்த டி.எஸ்.பி.செந்தில், காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா்.

இது குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாட்சாயணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், தாட்சாயணி பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக அடித்துக் கொலைச் செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.