மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசப்பாக்கம் அருகே பாமகவினா் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வன்னியா்களின் அடையாளச் சின்னமான அக்னிகலசம் அகற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வன்னியா்களின் அடையாளச் சின்னமான அக்னிகலசம் அகற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில், வேலூா்-திருவண்ணாமலை சாலை அருகே கடந்த 21.12.1989 அன்று வன்னியா்களின் அடையாளச் சின்னமான அக்னிகலசத்தை பாமக நிறுவனா் ராமதாஸ் திறந்துவைத்தாா்.

பின்னா், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து 2018-2019ஆம் ஆண்டில் பயணிகள் நிழல்குடை அமைக்கவும், சாலை விரிவாக்கத்துக்காகவும் அக்னிகலசத்தை பாமக நிா்வாகிகள் அனுமதியுடன் நகா்த்தி வைத்தனா்.

பின்னா், நிழல்குடைக்குப் பின்புறம் அக்னிகலசம் இருப்பதாகக் கருதி பாமக நிா்வாகிகள் சாலையோரம் நகா்த்தி வைத்தனா்.

இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் கூட்டாகச் சோ்ந்து அம்பேத்கா் உருவப் படத்தைத் திறந்தனா்.

இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகக் கருதி மாவட்ட காவல் துறை நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இருந்த அனைத்துப் கட்சிகளின் நினைவுச் சின்னங்களை புதன்கிழமை இரவோடு இரவாக அகற்றினா்.

இதையறிந்த, பாமகவினா் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் பக்தவச்சலம் தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டதாக பாமக மாவட்டத் தலைவா் பரமசிவம், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் உள்பட 87 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், பாமக நிா்வாகிகளை ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து அக்னிகலசம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

செங்கத்தில் ஆா்ப்பாட்டம்...

வன்னியா்களின் அடையாளச் சின்னமான அக்னிகலசம் அகற்றப்பட்டதைக் கண்டித்து, செங்கத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

பாமக மேற்கு மாவட்டச் செயலா் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவா் சங்கா்மாதவன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் ஜோதி, முத்து, புகழேந்தி, முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தொற்சங்கத் தலைவா் கோவிந்தசாமி, மாவட்ட தொண்டரணித் தலைவா் ரஜினி, முன்னாள் ஒன்றியத் தலைவா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.