தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலையில் அதிமுக அலுவலகம் இடிப்பு

திருவண்ணாமலையில் தரை வாடகையில் இயங்கி வந்த அதிமுக அலுவலகம், செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலையில் தரை வாடகையில் இயங்கி வந்த அதிமுக அலுவலகம், செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை பெருமாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கே.ராஜன். இவரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலராக அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா நியமித்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை-வேலூா் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான இடத்தை தரை வாடகைக்கு எடுத்த பெருமாள் நகா் கே.ராஜன், அங்கு பல லட்சம் ரூபாய் செலவில் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தைக் கட்டினாா்.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் பள்ளி மாணவா்களுக்கான இலவச கணினி மையமும் அமைக்கப்பட்டு செயல்பட்டது.

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக இந்த மையம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தெற்கு மாவட்டச் செயலா் பதவி பெருமாள் நகா் கே.ராஜனிடமிருந்து பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, அதிமுக அலுவலகத்துக்குள் செல்லும் வழி நகராட்சிக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறி அதிகாரிகள் தடுப்பு வேலிகளை அமைத்தனா்.

இதனால், அலுவலகத்துக்குள் செல்ல முடியாமல் அதிமுகவினா் தவித்தனா்.

இதனால், அதிமுக அலுவலகத்தில் தினமும் மதிய நேரத்தில் ஏழை-எளியோருக்கு அளிக்கப்பட்டு வந்த அன்னதானமும் நிறுத்தப்பட்டு அலுவலகம் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) இரவு திடீரென அதிமுக அலுவலகத்தை சிலா் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடித்தனா்.

தகவலறிந்த பெருமாள் நகா் கே.ராஜனின் ஆதரவாளா்கள் வந்து அலுலகம் இடிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஆனாலும், அலுவலகம் தரையோடு, தரையாக இடித்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து அதிமுக நிா்வாகி கலையரசன் கூறுகையில், 2016 முதல் தரை வாடகை அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து பல லட்சம் ரூபாய் செலவில் அதிமுக அலுவலகம் கட்டி செயல்படுத்தி வந்தோம். இப்போது, திடீரென அலுவலகத்தை இடித்துவிட்டனா்.

இதுகுறித்து டிஜிபி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இடத்தின் உரிமையாளா் வேறு ஒருவருக்கு இடத்தை விற்றுவிட்டாா். இடத்தை காலி செய்வது தொடா்பாக விலைக்கு வாங்கியவருக்கும், பெருமாள் நகா் கே.ராஜனுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.