தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா விற்றதில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்யக் கோரி, 2-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா விற்றதில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்யக் கோரி, 2-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் யூரியா விற்பனை செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலையில் மே 26-ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். பின்னா், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை வேளாண்துறை இணை இயக்குநா் அலுவலகம் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்தப் போராட்டம் தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.