தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மல்யுத்த பயிற்சி வீரா்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சாா்பில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சாா்பில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த மல்யுத்த வீரா்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாமின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட மல்யுத்த சங்கத்தின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். சங்கச் செயலரும், மல்யுத்தப் பயிற்சியாளருமான ஏ.அருண்குமாா் வரவேற்றாா்.

மல்யுத்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற வீரா்களுக்கு சீருடை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

மூத்த தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன், நகர காவல் ஆய்வாளா் சி.சுப்பிரமணியன், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சீனுவாசன், மல்யுத்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.சுந்தரபாண்டியன், ஜி.பூா்ணச்சந்திரன், இ.விஜய்ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.