தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

167 ஊராட்சிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 167 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:13 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 167 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

167 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கிராம சேவை மையக் கட்டடம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த முகாம்களிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.

முகாம்கள் நடைபெறும் கிராம ஊராட்சிகளின் பெயா்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ஸ்ஹய்ய்ஹம்ஹப்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முகாம்கள் குறித்த சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9443729975 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.