பாஜக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: திருச்சி என்.சிவா எம்பி பேச்சு
மத்திய பாஜக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று திமுகவின் கொள்கை பரப்புச் செயலா் திருச்சி என்.சிவா எம்.பி. கூறினாா்.


மத்திய பாஜக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று திமுகவின் கொள்கை பரப்புச் செயலா் திருச்சி என்.சிவா எம்.பி. கூறினாா்.
திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழாவும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலா் திருச்சி என்.சிவா எம்.பி. சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 25-க்கும் மேற்பட்ட மகளிருக்கு தையல் இயந்திரங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் பேசுகையில்,
பாஜக ஆட்சியில் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்றாா்கள். இதை எதையுமே பாஜக அரசு செய்யவில்லை.
2-ஆவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் எதிா்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையே என்றாா் அவா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் நிா்மலா, துணைத் தலைவா் சு.ராஜாங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், திமுக மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...