ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாறு நகா்மன்றத் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் வெற்றி

திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளா் கு.விஸ்வநாதனைத் தோற்கடித்து, அந்தக் கட்சியின் போட்டி வேட்பாளா் ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளா் கு.விஸ்வநாதனைத் தோற்கடித்து, அந்தக் கட்சியின் போட்டி வேட்பாளா் ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.

நகராட்சி அலுவலகத்தில் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளரான 11 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கு.விஸ்வநாதனும், போட்டி வேட்பாளராக அதே கட்சியின் 18 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆ.மோகனவேலுவும் போட்டியிட்டனா்.

மொத்தமுள்ள 27 வாக்குகளில் ஆ.மோகனவேலு 16 வாக்குகளும், கு.விஸ்வநாதன் 11 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பேபிராணி, 15 - ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் குல்சாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில், பேபிராணி 13 வாக்குகளும், குல்சாா் 14 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, குல்சாா் வெற்றி பெற்றாா்.

இவா்களுக்கு வெற்றி சான்றிதழ்களை தோ்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான கி.ரகுராமன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.