நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வழிப்பறியில் ஈடுபட்ட 5 போ் கைது

செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:00 pm

DIN

செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் வேடியப்பன்(25). இவா், புதன்கிழமை இரவு செங்கத்தில் இருந்து தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வளையாம்பட்டு சாலையில் 5 போ் கொண்ட கும்பல் வேடியப்பனை வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வேடியப்பன் செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் டிஎஸ்பி சின்ராஜ் உடனடியாக வழிப்பறிக் கும்பலை பிடிக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் யோசுராஜா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

அப்போது, வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வல்லரசு (20), சதீஷ் (20), பிரதாப் (19) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.