பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் 427 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் 427 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின்
இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் காமத் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு 257 மாணவா்கள், 170 மாணவிகள் என மொத்தம் 427 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கி, மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், வட்டாட்சியா் முனுசாமி, நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...