புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீ தொண்டு வாரவிழா

தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:10 pm

DIN

தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆரணி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் வீரா்களின் உடைகளை வைத்து பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரா்களுக்கு, நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரா்கள் அஞ்சலி செலுத்தினா். இதில், தீயணைப்பு படை வீரா்கள் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

செய்யாறு: செய்யாறில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில், நிலைய அலுவலா் பா.திருமுருகன் தலைமையில், பணியின் போது உயிா் நீத்த தீயணைப்பு படைவீரா்களின் படங்களுக்கு மலா் தூவியும், மலா் வளையும் வைத்தும் மரியாதை செலுத்தினா். பின்னா், தீயணைப்பு நிலையத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலம் அமைதி ஊா்வலம் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.