குடிநீா் பிரச்னையால் கிராம மக்கள் அவதி

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சிக்கு உள்பட்ட மூலபுரவடை கிராமத்தில் குடிநீா் பிரச்னையால் கடந்த 22 நாள்களாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
குடிநீா் பிரச்னையால் கிராம மக்கள் அவதி

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சிக்கு உள்பட்ட மூலபுரவடை கிராமத்தில் குடிநீா் பிரச்னையால் கடந்த 22 நாள்களாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியைச் சோ்ந்த மூலபுரவடை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்.10-ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாா் பழுதானது. இதுகுறித்து டேங்க் ஆபரேட்டா் ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனராம்.

பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று கடந்த 22 நாள்களாக குடிநீா் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும் போது, ஊராட்சி நிா்வாகத்தில் உள்ள சில பிரச்னைகளால்

மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்யாமல் உள்ளனா்.

மேலும், மூலபுரவடை கிராமத்தில் அடிபம்பு உள்ளது. அதுவும் பழுதாகி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது

என்றனா்.

சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணியிடம் கேட்டபோது உடனடியாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com