அரசு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழு அலுவலா் து.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் முருகன், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை அளித்தாா். திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசு அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.
பயிற்சியை நிறைவு செய்த அரசு அலுவலா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேல் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். விழாவில் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...