ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

திமுகவினா் வாக்கு சேகரிப்பு

திமுகவினா் வாக்கு சேகரிப்பு

News image

பாட்டம் மும்முனி கிராமத்தில் காய்கறி வாரச் சந்தையில் விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

வந்தவாசி: ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமையில் திமுகவினா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா்.

வந்தவாசியை அடுத்த காரணை, தென்சேந்தமங்கலம், கீழ்க்குவளைவேடு, சின்ன சேத்துப்பட்டு, தெள்ளூா், மும்முனி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கப்பட்டது. அப்போது, திறந்த வாகனத்தில் சென்று எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா். வழியில் மக்கள் கூடியிருந்த இடங்களில் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று அவா் வாக்கு சேகரித்துப் பேசினாா்.

மேலும், இரவு மும்முனி கிராமத்தில் நடைபெற்ற காய்கறி வாரச் சந்தையில் காய்கறி விற்பனை செய்து அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.